Monday 29 June 2020

திருமந்திரம் முதல் பக்கம்

 

திருமூலர் திருமந்திரம் ஒரு அறிமுகம் 

காமமும்கள்ளும்

வாமத்தோர் தாமும்

கண்க்கு அறிந்தார் 

நடுவுநின்றார்க்கன்றி

மன்மனம்எங்குண்டு

பாய்கின்ற வாயு

குழவியும் ஆணாம்

பாய்ந்தபின் ஐந்து ஓடில்

நாட்டுக்கு நாயகன்

கைவிட்டு நாடி

பண்டம் பெய்கூரை

குயிற்குஞ்சு முட்டை

மாதா உதரம் மலம்

காக்கை கவரில் என்?

அண்ணல் அருளால்

எட்டுத் திசையும்

உள்ளத்து ஒருவனை

 புவனம் படைப்பார்

புரையற்ற பாலினுள்

அங்கி மிகாமை வைத்தான்

பாடவல்லார் நெறி

வானவர் என்றும்

தூங்கிக்கண்டார்

மார்க்கங்கள் ஈன்ற

ஆதி நடம் செய்தான் 

பார்க்கின்றமாதரைப் பாராது

எண்ணாயிரத்தாண்டு 

புரிந்துஅவன் ஆடின் புவனங்கள் ஆடும்

பதி பசு பாசம்

நந்தி அருளாலே

உரு அறியும் பரிசு

காலவி; எங்கும்

கலந்து நின்றாள் கன்னி

பின்னை நின்று 

மறப்பதுவாய் நின்ற மாய நன்னாடன்

ஒங்காரத்துள்ளே

அண்டம் முதலா அவனி 

சூடும் இளம்பிறை சூல கபாலினி 

ஆமை ஒன்று ஏறி அகம்படியான் என 

கால்அங்கிநீர்பூகலந்த ஆகாயமே

கருடனுருவங் கருது 

உடலும்உயிரும் ஒழிவு அற ஒன்றின்

அழிகின்ற சாயாபுருடனைப் போல 

துருத்தியுள் அக்கரை தோன்றும் மலைபோல்


 

Friday 20 July 2018

44 துருத்தியுள் அக்கரை


துருத்தியுள் அக்கரை தோன்றும் மலைபோல்

விருத்திகண் காணிக்கப் போவார் முப்போதும்

வருத்தி உள்நின்ற மலையைத் தவிர்ப்பாள்

ஒருத்தி உள்ளாள் அவள்ஊர் அறியோமே---திருமந்திரம் 2895

43 அழிகின்ற சாயாபுருடனைப்


அழிகின்ற சாயாபுருடனைப் போல

கழிகின்ற நீரில் குமிழியைக் காணில்

எழுகின்ற தீயில் கற்பூரத்தை ஒக்கப்

பொழிகின்றது இவ்வுடல் போம் அப்பரத்தே

திருமந்திரம் 2605




42 உடலும் உயிரும்


உடலும் உயிரும் ஒழிவு அற ஒன்றின்

படரும் சிவசக்தி தானே பரமாம்

உடலைவிட்டு இந்த உயிர் எங்கும் ஆகிக்

கடையும் தலையும் கரக்கும் சிவத்தே

திருமந்திரம் 2606


41 கருடனுருவங் கருதும்


கருடனுருவங் கருது மளவிற்

 பருவிடந் தீர்ந்து பயங்கெடு மாபோற்

குருவி னுருவங் குறித்தவப் போதே

திரி மலந் தீர்ந்து சிவன்அவன் ஆமே. திருமந்திரம் 2623





Wednesday 18 July 2018

40 கால் அங்கி நீர்,


கால், அங்கி, நீர், பூ, கலந்த ஆகாயமே

மால்,அங்கி,ஈசன்,பிரமன்,சதாசிவன்,

மேல் அஞ்சும் ஓடி, விரவ வல்லார்கட்குக்


காலமும் இல்லை,கருத்து இல்லைதானே. திருமந்திரம்.2279











39 ஆமை ஒன்று ஏறி


ஆமை ஒன்று ஏறி அகம்படியான் என

ஓம என்று ஓத உள்ளோளியாய் நிற்கும்

தாம நறுங்குழல் தையலைக் கண்டபின்

சோம நறுமலர் சூடி நின்றாளே--- திருமந்திரம் 1194