Showing posts with label திருமந்திரம். Show all posts
Showing posts with label திருமந்திரம். Show all posts

Wednesday, 18 July 2018

40 கால் அங்கி நீர்,


கால், அங்கி, நீர், பூ, கலந்த ஆகாயமே

மால்,அங்கி,ஈசன்,பிரமன்,சதாசிவன்,

மேல் அஞ்சும் ஓடி, விரவ வல்லார்கட்குக்


காலமும் இல்லை,கருத்து இல்லைதானே. திருமந்திரம்.2279











38 சூடும் இளம்பிறை


சூடும் இளம்பிறை சூல கபாலினி

நீடும் இளங்கொடி, நின்மலி நேரிழை

நாடி நடு இடை, ஞானம் உருவ நின்று,


ஆடும் அதன்வழி அண்ட முதல்வியே. திருமந்திரம்.1197

36 ஒங்காரத்துள்ளே


ஒங்காரத்துள்ளே  உதித்த  ஐம்பூதங்கள்,


ஒங்காரத்துள்ளே உதித்த சராசரம்

ஓங்கார அதீதத்து உயிர்  மூன்றும்  உற்றன


ஓங்கார சீவன் பரசிவன்  ஆமேதிருமந்திரம்  2640


Tuesday, 17 July 2018

35 மறப்பதுவாய் நின்ற


மறப்பதுவாய் நின்ற மாய நன்னாடன்

பிறப்பினை நீங்கிய பேரருளாளன்

சிறப்புடையான் திருமங்கையும் தானும்

உறக்கமில் போகத்து உறங்கி இருந்தானே திருமந்திரம் 2939


33 கலந்து நின்றாள் கன்னி


கலந்து நின்றாள் கன்னி காதலனோடு

கலந்து நின்றாள் உயிர் கற்பன எல்லாம்


கலந்து நின்றாள் கலை ஞானங்கள் எல்லாம்

கலந்து நின்றாள் கன்னி காலமுமாமே.

திருமந்திரம் 1202





Monday, 16 July 2018

28 புரிந்து அவன் ஆடின்


புரிந்து அவன் ஆடின் புவனங்கள் ஆடும்

தெரிந்து அவன் ஆடும் அளவு எங்கள் சிந்தை

புரிந்து அவன் ஆடின் பல் பூதங்கள் ஆடும்

எரிந்து அவன் ஆடல் கண்டு இன்புற்ற வாறே

திருமந்திரம்2748

27 எண்ணாயிரத்தாண்டு


எண்ணாயிரத்தாண்டு யோகம் இருப்பினும்

கண் ஆர் அமுதினைக் கண்டு அறிவார் இல்லை

உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கினால்

கண்ணாடி போலக் கலந்து நின்றானே

திருமந்திரம். 596

26 பார்க்கின்ற மாதரைப்


பார்க்கின்ற மாதரைப் பாராது அகன்று உளே 

ஓர்க்கின்றது உள்ளம் உருக்கி அனல் மூட்டி

பார்க்கின்ற கண், ஆசை பாழ்பட மூலத்தே

சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே. திருமந்திரம்.1915


Sunday, 15 July 2018

20 அங்கி மிகாமை வைத்தான்

அங்கி மிகாமை வைத்தான் உடல்; வைத்தபின்

எங்கும் மிகாமை வைத்தான் உலகு ஏழையும்;

தங்கி மிகாமை வைத்தான் தமிழ்ச் சாத்திரம்;

பொங்கி மிகாமை வைத்தான் பொருள் தானுமே.

திருமந்திரம் 

19 புரையற்ற பாலினுள்

புரையற்ற பாலினுள் நெய் கலந்தாற்போல்

திரை அற்ற சிந்தையுள் ஆரியன் செப்பும்

உரையற்று உணர்வோர் உடம்பு இங்கு ஒழிந்தால்

கரை அற்ற சோதி கலந்த சத்து ஆமே. திருமந்திரம் 132

18 புவனம் படைப்பார்


புவனம் படைப்பார்  ஒருவன் ஒருத்தி

புவனம் படைப்பார்க்கு  புத்திரர்  ஐவர்

புவனம் படைப்பானும்  பூமிசை  ஆயன்


புவனம் படைப்பான் அப்புண்ணியன் தானே

திருமந்திரம்.197

Saturday, 14 July 2018

17 உள்ளத்து ஒருவனை


உள்ளத்து ஒருவனை  உள்  உரு  சோதியை

உள்ளம் விட்டு  ஓரடி நீங்கா ஒருவனை

உள்ளமும் தானும் உடனே  இருக்கினும்

உள்ளம் அவனை உரு அறியாதே.

திருமந்திரம்


15 அண்ணல் அருளால்

அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்

எண்ணிலி கோடி தொகுத்திடும் ஆயினும்

அண்ணல் அறிந்த அறிவு அறியாவிடின்

எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே.

திருமந்திரம் 98

14 காக்கை கவரில் என்?


காக்கை கவரில் என்? கண்டார் பழிக்கில் என்?

பால் துளி பெய்யில் என்? பல்லோர் பழிச்சில் என்?

தோல் பையிநின்று தொழிலறச் செய்து,ஊட்டும்

கூத்தன் புறப்பட்டுப் போன இக்கூட்டையே
திருமந்திரம்340