Showing posts with label திருமூலர். Show all posts
Showing posts with label திருமூலர். Show all posts

Friday, 20 July 2018

44 துருத்தியுள் அக்கரை


துருத்தியுள் அக்கரை தோன்றும் மலைபோல்

விருத்திகண் காணிக்கப் போவார் முப்போதும்

வருத்தி உள்நின்ற மலையைத் தவிர்ப்பாள்

ஒருத்தி உள்ளாள் அவள்ஊர் அறியோமே---திருமந்திரம் 2895

42 உடலும் உயிரும்


உடலும் உயிரும் ஒழிவு அற ஒன்றின்

படரும் சிவசக்தி தானே பரமாம்

உடலைவிட்டு இந்த உயிர் எங்கும் ஆகிக்

கடையும் தலையும் கரக்கும் சிவத்தே

திருமந்திரம் 2606


Wednesday, 18 July 2018

40 கால் அங்கி நீர்,


கால், அங்கி, நீர், பூ, கலந்த ஆகாயமே

மால்,அங்கி,ஈசன்,பிரமன்,சதாசிவன்,

மேல் அஞ்சும் ஓடி, விரவ வல்லார்கட்குக்


காலமும் இல்லை,கருத்து இல்லைதானே. திருமந்திரம்.2279











39 ஆமை ஒன்று ஏறி


ஆமை ஒன்று ஏறி அகம்படியான் என

ஓம என்று ஓத உள்ளோளியாய் நிற்கும்

தாம நறுங்குழல் தையலைக் கண்டபின்

சோம நறுமலர் சூடி நின்றாளே--- திருமந்திரம் 1194

37 அண்டம் முதலா அவனி



அண்டம் முதலா அவனி பரியந்தம்

கண்டது ஒன்று இல்லை கனங்குழை அல்லது

கண்டனும் கண்டியும் ஆகிய காரணம்

குண்டிகை கோளிகை கண்டதனாலே. திருமந்திரம் 1198


குண்டிகை --ஆண், கோளிகை பெண்

36 ஒங்காரத்துள்ளே


ஒங்காரத்துள்ளே  உதித்த  ஐம்பூதங்கள்,


ஒங்காரத்துள்ளே உதித்த சராசரம்

ஓங்கார அதீதத்து உயிர்  மூன்றும்  உற்றன


ஓங்கார சீவன் பரசிவன்  ஆமேதிருமந்திரம்  2640


Tuesday, 17 July 2018

32 காலவி; எங்கும்


காலவி; எங்கும் கருத்தும் அருத்தியும்

கூலவி ஒன்றாகும் கூடல் இழைத்தனள்,

மாலினி,மாகுலி, மாய சண்டிகை,

பாலினி பாலவன் பாகம் அது ஆமே

திருமந்திரம் 1203



.





31 உரு அறியும் பரிசு

உரு அறியும் பரிசு ஒன்று உண்டு; வானோர்

கருவறை பற்றிக் கடைந்து அமுது உண்டார்;

அருவரை ஏறி அமுது உண்ண மாட்டார்


திருவரையா மனம் தீர்ந்து அற்றவாறேதிருமந்திரம் 618


30 நந்தி அருளாலே

நந்தி அருளாலே மூலனை நாடி பின்

நந்தி அருளாலே சதாசிவன் ஆகினேன்

நந்தி அருளால் மெய்ஞானத்துள் நண்ணினேன்

நந்தி அருளாம் என நான் இருந்தேனே

திருமந்திரம்

Monday, 16 July 2018

28 புரிந்து அவன் ஆடின்


புரிந்து அவன் ஆடின் புவனங்கள் ஆடும்

தெரிந்து அவன் ஆடும் அளவு எங்கள் சிந்தை

புரிந்து அவன் ஆடின் பல் பூதங்கள் ஆடும்

எரிந்து அவன் ஆடல் கண்டு இன்புற்ற வாறே

திருமந்திரம்2748

27 எண்ணாயிரத்தாண்டு


எண்ணாயிரத்தாண்டு யோகம் இருப்பினும்

கண் ஆர் அமுதினைக் கண்டு அறிவார் இல்லை

உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கினால்

கண்ணாடி போலக் கலந்து நின்றானே

திருமந்திரம். 596

Sunday, 15 July 2018

25 ஆதி நடம் செய்தான்


ஆதி நடம் செய்தான் என்பர்கள் ஆதர்கள்

ஆதி நடம் செய்கை ஆரும் அறிகிலர்

ஆதி நடமாடல் ஆரும் அறிந்தபின்

ஆதி நடமாடல் ஆம் அருட்சக்தியே.. திருமந்திரம் 2749


24 மார்க்கங்கள் ஈன்ற


மார்க்கங்கள் ஈன்ற மனோன்மணி,மங்கலி

யார்க்கும் அறிய அரியாள் அவள் ஆகும்

வாக்கும் மனமும் மருவி ஒன்றாய்விட

நோக்கும் பெருமைக்கு நுண்ணறிவு ஆமே

திருமந்திரம். 1214

23 தூங்கிக்கண்டார்


தூங்கிக்கண்டார் சிவலோகமுந்  தம்முள்ளே

தூங்கிக்கண்டார் சிவயோகமுந்  தம்முள்ளே

தூங்கிக்கண்டார் சிவபோகமுந்  தம்முள்ளே

தூங்கிக்கண்டார் நிலை சொல்வ தெவ்வாறே

திருமந்திரம்.127

22 வானவர் என்றும்


வானவர் என்றும் மனிதர் இவர் என்றும்

தேன் அமர் கொன்றைச் சிவன் அருள் அல்லது

தான் அமர்ந்து ஓரும் தனித்தெய்வம் மற்று இல்லை;

ஊன் அமர்ந்தோரை உணர்வது தானே.

திருமந்திரம். 107

21 பாடவல்லார் நெறி


பாடவல்லார் நெறி பாட அறிகிலேன்

ஆட வல்லார் நெறி ஆட அறிகிலேன்

நாட வல்லார் நெறி ஞானம் அறிகிலேன்

தேட வல்லார் நெறி தேடுகில்லேனே

திருமந்திரம் 78




20 அங்கி மிகாமை வைத்தான்

அங்கி மிகாமை வைத்தான் உடல்; வைத்தபின்

எங்கும் மிகாமை வைத்தான் உலகு ஏழையும்;

தங்கி மிகாமை வைத்தான் தமிழ்ச் சாத்திரம்;

பொங்கி மிகாமை வைத்தான் பொருள் தானுமே.

திருமந்திரம் 

18 புவனம் படைப்பார்


புவனம் படைப்பார்  ஒருவன் ஒருத்தி

புவனம் படைப்பார்க்கு  புத்திரர்  ஐவர்

புவனம் படைப்பானும்  பூமிசை  ஆயன்


புவனம் படைப்பான் அப்புண்ணியன் தானே

திருமந்திரம்.197

Saturday, 14 July 2018

17 உள்ளத்து ஒருவனை


உள்ளத்து ஒருவனை  உள்  உரு  சோதியை

உள்ளம் விட்டு  ஓரடி நீங்கா ஒருவனை

உள்ளமும் தானும் உடனே  இருக்கினும்

உள்ளம் அவனை உரு அறியாதே.

திருமந்திரம்


16 எட்டுத் திசையும்

எட்டுத் திசையும் அடிகின்ற காற்று அவன்


வட்டத்திரை,அனல்,மாநிலம், ஆகாசம்,


ஒட்டி உயிர்நிலை என்னும் இக்காயப்பை,


கட்டி அவிழ்க்கின்ற கண்ணுதல் காணுமேதிருமந்திரம் 250