Showing posts with label சிவாகமம். Show all posts
Showing posts with label சிவாகமம். Show all posts

Sunday, 15 July 2018

21 பாடவல்லார் நெறி


பாடவல்லார் நெறி பாட அறிகிலேன்

ஆட வல்லார் நெறி ஆட அறிகிலேன்

நாட வல்லார் நெறி ஞானம் அறிகிலேன்

தேட வல்லார் நெறி தேடுகில்லேனே

திருமந்திரம் 78




19 புரையற்ற பாலினுள்

புரையற்ற பாலினுள் நெய் கலந்தாற்போல்

திரை அற்ற சிந்தையுள் ஆரியன் செப்பும்

உரையற்று உணர்வோர் உடம்பு இங்கு ஒழிந்தால்

கரை அற்ற சோதி கலந்த சத்து ஆமே. திருமந்திரம் 132

18 புவனம் படைப்பார்


புவனம் படைப்பார்  ஒருவன் ஒருத்தி

புவனம் படைப்பார்க்கு  புத்திரர்  ஐவர்

புவனம் படைப்பானும்  பூமிசை  ஆயன்


புவனம் படைப்பான் அப்புண்ணியன் தானே

திருமந்திரம்.197

Saturday, 14 July 2018

15 அண்ணல் அருளால்

அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்

எண்ணிலி கோடி தொகுத்திடும் ஆயினும்

அண்ணல் அறிந்த அறிவு அறியாவிடின்

எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே.

திருமந்திரம் 98