Showing posts with label திருமூலர் திருமந்திரம்.தியானம். Show all posts
Showing posts with label திருமூலர் திருமந்திரம்.தியானம். Show all posts

Friday, 13 July 2018

11 பண்டம் பெய்கூரை


பண்டம் பெய்கூரை பழகி விழுந்தக்கால் 


உண்டஇப்பெண்டிரும் மக்களும் பின் செலார்


கொண்டவிரதமும் ஞானமும் அல்லது
 

மண்டி அவருடன் வழிநடவாதே---திருமந்திரம்

     317


9 நாட்டுக்கு நாயகன்





நாட்டுக்கு நாயகன் நம் ஊர்த் தலைமகன்

காட்டுச் சிவிகை ஒன்று ஏறி கடைமுறை

நாட்டார்கள் பின் செல்ல முன்னே பறை கொட்ட 

நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே

திருமந்திரம் 326

8 பாய்ந்தபின் ஐந்து ஓடில்

8


பாய்ந்தபின் ஐந்து ஓடில் ஆயுளும் நூறு ஆகும்;

பாய்ந்தபின் நால் ஓடின் பாரினில் எண்பதாம்;

பாய்ந்திடும் வாயு பகுத்துஅறிந்து இவ்வகை;

பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலும் ஆமே.

திருமந்திரம் 288

ஐந்து ---ஐந்து விரற்கடை
நான்கு--நான்கு விரற்கடை



Thursday, 12 July 2018

7 குழவியும் ஆணாம்

7


குழவியும் ஆணாம் வலத்தது ஆகின்;

குழவியும் பெண்ணாம் இடத்தது ஆகின்;

குழவி இரண்டாம் அபானன் எதிர்க்கின்;

குழவி அலி ஆகும் கொண்டகால் ஒக்கிலே. திருமந்திரம் 291


6 பாய்கின்ற வாயு




6
பாய்கின்ற வாயு குறையின் குறள் ஆகும்;

பாய்கின்ற வாயு இளைக்கின் முடம் ஆகும்;

பாய்கின்ற வாயு நடுப்படின் கூன் ஆகும்;

பாய்கின்ற வாயு மாதர்க்கு இல்லை பார்க்கிலே

திருமந்திரம் 289 

குறள்குள்ளம்

5 மன்மனம் எங்குண்டு

5

மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு

மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை

மன்மனத்துள்ளே மகிழ்ந்திருப்பார்க்கு

மன்மனத்துள்ளே மனோலயம் ஆமே

திருமந்திரம்.613
மன்மனம்---உயிருணர்வு
மனோலயம்---மனம் ஒடுங்குதல்.

4 நடுவு நின்றார்க்கன்றி

4
நடுவு நின்றார்க்கன்றி ஞானமும் இல்லை

நடுவு நின்றார்க்கு நரகமும் இல்லை.

நடுவு நின்றார் நல்ல தேவரும் ஆவர்

நடுவு நின்றார் வழி நானும் நின்றேனே
திருமந்திரம் 539

3 கணக்கு அறிந்தார்




3


கணக்கு அறிந்தார்க்கன்றிக் காண ஒண்ணாது

கணக்கு அறிந்தார்க்கன்றிக் கைகூடா காட்சி

கணக்கு அறிந்தார் உண்மையைக் கண்டு அண்டம் நிற்கும்

கணக்கு அறிந்தார் கல்வி கற்று அறிந்தாரே. ---thirumanthiram 483

2 வாமத்தோர் தாமும்

2



வாமத்தோர் தாமும் மது உண்டு மாளுவர்

காமத்தோர் காமக்கள் உண்டே கலங்குவர்

ஓமத்தோர் உள்ளோளிக் குள்ளே உணர்வர்கள்

நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமேதிருமந்திரம்507

1 காமமும் கள்ளும்

1

   காமமும் கள்ளும்கலதிகட்கே ஆகும்

மாமலமும் சமயத்துள்ளே மயலுறும்

போமதி ஆகும் புனிதன் இணையடி

 ஓமய ஆனந்தத்தேறல் உணர்வு உண்டே. திருமந்திரம் 506


Monday, 12 November 2012

திருமூலர் திருமந்திரம்










"ஒன்றே குலமும், ஒருவனே தேவன்..."என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சமுதாயத்திற்கு வேண்டிய நல்லிணக்க செய்திகள் திருமந்திரத்தில் அழகாக விளக்கியவர் திருமூலர். ஆன்மிகம், மருத்துவம், விஞ்ஞானம், தத்துவம், உளவியல்  என திருமூலர் தொடாத துறைகளே இல்லை. திருமூலர் இயற்றிய மூவாயிரம் பாடல்களைக் கொண்ட திருமந்திர பாடல்களே இதற்கு சான்றாகும்.




திருமூலரின் சில பாடல்களைப் படிக்கும்பொழுது எனக்குள் தோன்றிய அகக்காட்சிகளை நான் இங்கே படங்களாக வரைந்து வைத்திருக்கிறேன். பாடல்களுக்கும் படங்களுக்கும் தொடர்பு இருக்கிறதோ என்னவோ எனக்குத் தெரியவில்லை. இருப்பினும் நான் அவைகளை இங்கே பதிவு செய்திருக்கிறேன். வாழ்க வளமுடன் மு.நமசிவாயம் (M.NAMASIVAYAM)