Friday 20 July 2018

44 துருத்தியுள் அக்கரை


துருத்தியுள் அக்கரை தோன்றும் மலைபோல்

விருத்திகண் காணிக்கப் போவார் முப்போதும்

வருத்தி உள்நின்ற மலையைத் தவிர்ப்பாள்

ஒருத்தி உள்ளாள் அவள்ஊர் அறியோமே---திருமந்திரம் 2895

43 அழிகின்ற சாயாபுருடனைப்


அழிகின்ற சாயாபுருடனைப் போல

கழிகின்ற நீரில் குமிழியைக் காணில்

எழுகின்ற தீயில் கற்பூரத்தை ஒக்கப்

பொழிகின்றது இவ்வுடல் போம் அப்பரத்தே

திருமந்திரம் 2605




42 உடலும் உயிரும்


உடலும் உயிரும் ஒழிவு அற ஒன்றின்

படரும் சிவசக்தி தானே பரமாம்

உடலைவிட்டு இந்த உயிர் எங்கும் ஆகிக்

கடையும் தலையும் கரக்கும் சிவத்தே

திருமந்திரம் 2606


41 கருடனுருவங் கருதும்


கருடனுருவங் கருது மளவிற்

 பருவிடந் தீர்ந்து பயங்கெடு மாபோற்

குருவி னுருவங் குறித்தவப் போதே

திரி மலந் தீர்ந்து சிவன்அவன் ஆமே. திருமந்திரம் 2623





Wednesday 18 July 2018

40 கால் அங்கி நீர்,


கால், அங்கி, நீர், பூ, கலந்த ஆகாயமே

மால்,அங்கி,ஈசன்,பிரமன்,சதாசிவன்,

மேல் அஞ்சும் ஓடி, விரவ வல்லார்கட்குக்


காலமும் இல்லை,கருத்து இல்லைதானே. திருமந்திரம்.2279











39 ஆமை ஒன்று ஏறி


ஆமை ஒன்று ஏறி அகம்படியான் என

ஓம என்று ஓத உள்ளோளியாய் நிற்கும்

தாம நறுங்குழல் தையலைக் கண்டபின்

சோம நறுமலர் சூடி நின்றாளே--- திருமந்திரம் 1194

38 சூடும் இளம்பிறை


சூடும் இளம்பிறை சூல கபாலினி

நீடும் இளங்கொடி, நின்மலி நேரிழை

நாடி நடு இடை, ஞானம் உருவ நின்று,


ஆடும் அதன்வழி அண்ட முதல்வியே. திருமந்திரம்.1197

37 அண்டம் முதலா அவனி



அண்டம் முதலா அவனி பரியந்தம்

கண்டது ஒன்று இல்லை கனங்குழை அல்லது

கண்டனும் கண்டியும் ஆகிய காரணம்

குண்டிகை கோளிகை கண்டதனாலே. திருமந்திரம் 1198


குண்டிகை --ஆண், கோளிகை பெண்

36 ஒங்காரத்துள்ளே


ஒங்காரத்துள்ளே  உதித்த  ஐம்பூதங்கள்,


ஒங்காரத்துள்ளே உதித்த சராசரம்

ஓங்கார அதீதத்து உயிர்  மூன்றும்  உற்றன


ஓங்கார சீவன் பரசிவன்  ஆமேதிருமந்திரம்  2640


Tuesday 17 July 2018

35 மறப்பதுவாய் நின்ற


மறப்பதுவாய் நின்ற மாய நன்னாடன்

பிறப்பினை நீங்கிய பேரருளாளன்

சிறப்புடையான் திருமங்கையும் தானும்

உறக்கமில் போகத்து உறங்கி இருந்தானே திருமந்திரம் 2939


34 பின்னை நின்று

பின்னை நின்று என்னே பிறவி பெறுவது

முன்னை நன்றாக முயல்தவம் செய்திலீர்

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே. திருமந்திரம் 63



33 கலந்து நின்றாள் கன்னி


கலந்து நின்றாள் கன்னி காதலனோடு

கலந்து நின்றாள் உயிர் கற்பன எல்லாம்


கலந்து நின்றாள் கலை ஞானங்கள் எல்லாம்

கலந்து நின்றாள் கன்னி காலமுமாமே.

திருமந்திரம் 1202





32 காலவி; எங்கும்


காலவி; எங்கும் கருத்தும் அருத்தியும்

கூலவி ஒன்றாகும் கூடல் இழைத்தனள்,

மாலினி,மாகுலி, மாய சண்டிகை,

பாலினி பாலவன் பாகம் அது ஆமே

திருமந்திரம் 1203



.





31 உரு அறியும் பரிசு

உரு அறியும் பரிசு ஒன்று உண்டு; வானோர்

கருவறை பற்றிக் கடைந்து அமுது உண்டார்;

அருவரை ஏறி அமுது உண்ண மாட்டார்


திருவரையா மனம் தீர்ந்து அற்றவாறேதிருமந்திரம் 618


30 நந்தி அருளாலே

நந்தி அருளாலே மூலனை நாடி பின்

நந்தி அருளாலே சதாசிவன் ஆகினேன்

நந்தி அருளால் மெய்ஞானத்துள் நண்ணினேன்

நந்தி அருளாம் என நான் இருந்தேனே

திருமந்திரம்

Monday 16 July 2018

29 பதி பசு பாசம்

பதி பசு பாசம்எனப் பகர் மூன்றில்

பதியினைப் போல் பசு பாசம் அனாதி

பதியினை சென்று அணுகா பசு,பாசம்

பதி அணுகின் பசு, பாசம் நில்லாவே
 .
திருமந்திரம் 113

28 புரிந்து அவன் ஆடின்


புரிந்து அவன் ஆடின் புவனங்கள் ஆடும்

தெரிந்து அவன் ஆடும் அளவு எங்கள் சிந்தை

புரிந்து அவன் ஆடின் பல் பூதங்கள் ஆடும்

எரிந்து அவன் ஆடல் கண்டு இன்புற்ற வாறே

திருமந்திரம்2748

27 எண்ணாயிரத்தாண்டு


எண்ணாயிரத்தாண்டு யோகம் இருப்பினும்

கண் ஆர் அமுதினைக் கண்டு அறிவார் இல்லை

உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கினால்

கண்ணாடி போலக் கலந்து நின்றானே

திருமந்திரம். 596

26 பார்க்கின்ற மாதரைப்


பார்க்கின்ற மாதரைப் பாராது அகன்று உளே 

ஓர்க்கின்றது உள்ளம் உருக்கி அனல் மூட்டி

பார்க்கின்ற கண், ஆசை பாழ்பட மூலத்தே

சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே. திருமந்திரம்.1915