thirumoolar

Thursday, 15 November 2012

தானே உலகிற்கு


தானே உலகிற்குத் தத்துவனாய் நிற்கும்
தானே உலகிற்குத் தையலுமாய் நிற்கும்
தானே உலகிற்குச் சம்புவுமாய் நிற்கும்
தானே உலகிற்குத்  தண்சுடர் ஆகுமே--திருமந்திரம் 1955




பார்த்த இடம்


பார்த்த இடம் எங்கும் பரந்து எழு  சோதியை
ஆத்தம் அது ஆகவே ஆய்ந்து அறிவார் இல்லை
காத்து உடல் உள்ளே, கருதி  இருந்தவர்
மூத்து உடல்  கோடியுகம் கண்டவாறே-----திருமந்திரம் 1032

அணுவில் அணுவினை





அணுவில் அணுவினை ஆதிப்பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு
அணுவில்  அணுவினை அணுக வல்லர்கட்க்கு
அணுவில் அணுவை அணுகலும்  ஆமே'—திருமூலர் 2008


நற்சுடர் ஆகும் சிரம்


நற்சுடர் ஆகும் சிரம், முக வட்டமாம்
கைச்சுடர் ஆகும் கருத்து உற்ற கைகளில்
பைச்சுடர் மேனிப் பதைப்பு அற்று இலிங்கமும்
நற்சுடராய் எழும்; நல்லது என்றானே--திருமந்திரம் 1011

மின்னா இளம்பிறை


மின்னா இளம்பிறை மேவிய குண்டத்துச்
சொன்னால் இரண்டு சுடர் நாகம் திக்கு எங்கும்
பன் நாலு  நாகம் பரந்த பரஞ்சுடர்
என்  ஆகத்துள்ளே இடங்கொண்டவாறே--திருமந்திரம் 1013